மனதின் வெளிப்பாடு


Monday 18 June 2012

பதறாத காரியம் சிதறாது


பதறாத காரியம் சிதறாது
எல்லோருக்கும்  தெரியும்
பதறாமல் இருப்பதற்கு
பக்குவப்பட்டால்தான்  முடியும்.

பாமரரும்  படித்தவரும்
பாகுபாடு ஏதுமின்றி
அவரவர் சூழ்நிலையால்
பதறித்தான் வாழ்கின்றார் .

உதறித்தான் தள்ளிடவே
உறுதியாக நினைத்தாலும்

கணப்பொழுதில்  நிலைமாறும்
உணர்ச்சிதானே பதற்றமாகும்.

பதறியதால் சிதைவதுதான் வரலாறு
பதறியதால் சிறந்தவர்கள் யார் கூறு ?

விளையாடச் சென்ற பிள்ளை
வீதியிலே விழுந்து விட்டான்
பதறியே ஓடினாள்  அந்தத் தாய்
சென்றதில் தவறில்லை
பதறி ஓடியதில்
கால் இடறி விழுந்த்திருந்தால் 
பதற்றம் பாதிப்பை இரட்டிப்பாக்கும்


மாட்டுக்கு கொம்பில் பலம்
கழுதைக்கு காலில் பலம்
மனிதனுக்கு அறிவுதான் பலம்
பதற்றம் அறிவினை மழுங்கச் செய்யும் .

ஆத்திரத்தால்,  அவசரத்தால்
எதிர்பார்ப்பால், ஏமாற்ற்த்தால்
எழுகின்ற பதற்றங்கள்
தினம் தினம் வேதனைதான் .

உன்னிலடங்கா மனந்தனைக்  கொண்டு
எண்ணிலடங்கா  சாதனைகள் எவ்வாறு ? 
பதற்றம் தணிந்து பக்குவப்படுவோம்
வாழ்வு  சிறக்க வாழ்ந்து காட்டுவோம்  !

  (சீரான உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தின் மூலம் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்தும் சிறந்த உளப்பயிற்சியின் மூலம் பதற்றத்தைத்  தவிர்த்தும்  எழுத்து,காம்  நண்பர்கள் அனைவரும் சிறந்த முன்மாதிரியாய்  திகழுவோம் )

  

1 comment:

  1. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது சென்று பார்வையிட.இதோ.
    http://blogintamil.blogspot.com/2013/11/blog-post.html?showComment=1383269378727#c4882904206101416278

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete